பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருககுறள் எளிய உரை இன்பம்

மற்று யான் என் உளேன் மன்னோ! அவரொடு யான் உற்ற நாள் உள்ள, உளேன். 1206 அவரோடு நான் கூடி மகிழ்ந்திருந்த இன்ப நாட்களை எண்ணித்தான் நான் உயிரோடு இருக்கிறேனே அல்லாமல், வேறு என்ன இருக்கிறது. நான் எண்ணி மகிழ்ந்து உயிர் வாழ்வதற்கு? மறப்பின், எவன் ஆவன் மன்கொல்-மறப்பு அறியேன், உள்ளினும் உள்ளம் சுடும்? 1207 காதலரை மறக்காமல், நினைத்துக் கொண்டிருக் கையிலேயே, அவர் பிரிவால் உண்டான துன்பம், என்னைச் சுடுகிறது. அவரை நினைக்காமல், மறந்து விட்டால், நான் என்ன ஆவேன்? எனைத்தும் நினைப்பினும் காயர் அனைத்து அன்றோ, காதலர் செய்யும் சிறப்பு? fo அடிக்கடியும், அளவுக்கு மீறியும் அவரை நான் நினைத்துக் கொண்டாலும், என்மீது அவர் கோபம் கொள்ள மாட்டாரே! ஆகா! அதுவன்றோ என் காதலரின் தனிச் சிறப்பு: -

விளியும், என் இன் உயிர்-வேறு அல்லம்’ என்பார் அளி இன்மை ஆற்ற நினைந்து. 1209 அவர் என்னுடன் இருக்கும்போது, ‘உன் உயிரும், என் உயிரும் வேறு அல்ல’ என்று முன்பு சொல்லிக் கொண்டிருந்த அவர், இப்போது என்னைவிட்டு பிரிந்து அன்பு செலுத்தாமல் இருப்பதை நினைத்தால், என் இனிய உயிர் அழிகின்றது. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅகி-வாழி மதி ! 1210 சந்திரனே! ஒளி கெடாமல், நீயாவது எனக்கு உதவி செய். என்னை விட்டுப் பிரியாமல் இருந்து பிரிந்து சென்று விட்ட காதலரை, உன் ஒளியின் உதவியால், நான் தேடிக் கண்டுபிடித்துக் கொள்கிறேன்.

252