பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை இன்பம்

இருந்து உள்ளி, என், பரிதல்?-நெஞ்சே!-பரிந்து உள்ளல் பைதல் தோய் செய்தார்கண் இல். 1243 மனமே! நீ என்னிடமே இருந்து கொண்டு அவரை நினைத்து வருந்துகிறாயே? இந்தத் துன்ப நோயை உண்டாக்கியவரிடம் சென்று, அவருக்கு இந்த நோயை உண்டாக்க மாட்டாயா?

கண்ணும் கொளச் சேறி-நெஞ்சே!-இவை என்னைத் தின்னும், அவர்க் காணல் உற்று! 24 நெஞ்சே! நீ அப்படி அவரைக் காணச் செல்லும்போது, இந்தக் கண்களையும் உன்னோடு அழைத்துச் செல்வாயாக அவரைக் காண வேண்டும் என்று அவை என்னைப் பிடுங்கித் தின்னுகின்றன.

செற்றார் எனக் கைவிடல் உண்டோ-நெஞ்சே!-யாம் உற்றால் உறaஅதவர்? #245 என் நெஞ்சே! நாம் அவரைத் தேடிச் சென்றாலும், அவர் நம்மை விரும்பாமல் வெறுத்து விரட்டி விடுவாரானால், அதுபோல நாமும் அப்படி அவரை நினைக்காமல் விட்டு விட முடியுமா?

கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால், புலந்து உணராய்; பொய்க் காய்வு காய்தி-என் நெஞ்சு ! 1246 நெஞ்சே! உன்னை நான் அறியமாட்டேன? புணர்ந்து, இன்பமூட்டும் காதலரைக் கண்டுவிட்டால், பிணக்கத்தை எல்லாம் விட்டு விட்டு, அவரிடம் தாவுகின்ற நீ, இப்போது எதற்காக இந்தப் பொய்ப் பிணக்கைக் காட்டுகிறாய்?

காமம்விடு, ஒன்றோ; நாண் விடு-தல் நெஞ்சே!யானோ பொறேன், இவ் இரண்டு! 3.247 அன்பு நெஞ்சே! நீ அவரிடம் கொண்ட காதலை விட்டு விடு, அல்லது வெட்கத்தை விட்டு விட்டு அவரிடம் போய் விடு; இந்த இரண்டையும் பொறுத்துக்

கொண்டு இனி பின்னால் இருக்க முடியாது.

260