பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை இன்பம்

130, நெஞ்சொடு புலத்தல் (மனம் வேகமாக ஒடுவதைக் கண்டு கோபப்படுவது) அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், எவன்,-நெஞ்சேட நீ எமக்கு ஆகாதது? 1291 மனமே! அவருடைய மனம், நம்மை நினையாமல், அவருக்குத் துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எமக்குத் துணையாய் நிற்காதது ஏன்?

உறாஅதவர்க் கண்ட கண்ணும், அவரைச் செறாஅர் எனச் சேறி-என் நெஞ்சு ! 1292 நெஞ்சே! நீ என்னிடம் அன்பு இல்லாதவர் என்று அறிந்த போதும், அவர் வெறுக்கமாட்டார் என்று நினைத்து அவரை அடைகின்றாய்!

‘கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ-நெஞ்சே!-நீ பெட்டாங்கு அவர்பின் செலல்? 1293 மனமே! நீ என்னிடம் நில்லாமல், விரும்பியபடி, அவரிடம் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் துயர் அடைந்தவருக்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ! இனி, அன்ன தின்னொடு சூழ்வார் யார்-நெஞ்சே! துணி செய்து துவ்வாய்காண் மற்று? 1294 நெஞ்சே! நீ அவரிடம் ஊடல் செய்து, பிறகு, இன்பம் நுகரமாட்டாய். ஆதலால், இனி அப்படிப்பட்டவைகளை உன்னுடன் கலந்து பேசி ஆலோசிப்பவர் யார்?

பெறாஅமை அஞ்சும்; பெறின், பிரிவு அஞ்சும்;

அறாஅ இடும்பைத்து-என் நெஞ்சு. 1295 காதலர் இல்லாதபோது, அவர் வரவில்லையே என்று கவலை கொள்ளச் செய்கிறது. அவர் வந்துவிட்டால், பிரிந்து போய்விடுவாரோ என்று கவலையாயிருக்கிறது. இப்படியாக, என் மனம் ஓயாத துன்பத்தை உடையதாக

இருக்கிறது. இருகக்iறது 270