பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளால் கிடைத்த பெருமை

திருக்குறள் நெறித் தோன்றல் 1985இல் தமிழக அரசின் “திருக்குறள் நெறிபரப்பு மையம்” நடத்திய விழாவில் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம், திருக்குறளார் முனுசாமி தலைமையில் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன், முல்லை பிஎல். முத்தையாவுக்கு திருக்குறள் நெறித் தோன்றல்’ என்ற பட்டம் வழங்கிகெளரவித்தார்.

திருவள்ளுவர் சீர் பரவுவார். 1993இல் “வள்ளுவர் வழி” வாசகர் வட்டம் நடத்திய விழாவில் தஞ்சைப்பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் சி. பாலசுப்பிரமணியம், முல்லை பிஎல். முத்தையாவுக்குத் திருவள்ளுவர் சீர் பரவுவார் என்ற விருதை வழங்கினார்.

குறள் ஆய்வுச் செம்மல்

1994இல் முனைவர் கு. மோகனராக தலைமையில் இயங்கும் உலகத் திருக்குறள் உயராய்வு மையம் சென்னையில் நடத்திய விழாவில் முல்லை பிஎல். முத்தையாவுக்கு குறள் ஆய்வுச் செம்மல் எனும் திருக்குறள் விருது வழங்கிச் சிறப்பித்தார்கள்.