பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை அறம்

19. புறம் கூறாமை (கோள் சொல்லாமல் இருப்பது)

அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன் புறம் கூறான் என்றல் இனிது. - 181 ஒருவன், நன்மை தரக் கூடியதைச் சொல்லாதவனாக, தீயவற்றைச் செய்தாலும் பிறனொருவனைப் பற்றி இழிவாகப் பேச மாட்டான் என்பது நல்லது. அறன் அழிஇ அல்லவை செய்தலின் தீதேபுறன் அழிஇப் பொய்த்து நகை. 82 நல்லன செய்வதை விடுத்து, தீயன புரிவதைவிட, ஒருவரைக் காணாத இடத்தில் அவரைப் பழித்துப் பேசி, கண்ட இடத்தில் பொய்யாக சிரித்துப் பேசுவது தீமை. புறம் கூறி, பொய்த்து, உயிர் வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும். 183 கோள் சொல்லிப் பொய்யாக உயிர் வாழ்வதை விட வறுமையினால் சாவது, அறுநூல் கூறும் பயனைத் தரும், கண் நின்று, கண் அறச் சொல்லினும், சொல்லற்கமுன் இன்று பின் நோக்காச் சொல். 184 ஒருவன் எதிரில் நின்று தாட்சண்யம் இல்லாமல், கடும் சொற்களைச் சொன்னாலும் குற்றம் இல்லை. ஆனால், ஒருவன் இல்லாத போது, பின்னால் வருவதை எண்ணாத சொல்லைச் சொல்லக் கூடாது.

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் புன்மையால் காணப்படும். 185 நல்லதைப் போற்றும் மனம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிக் கோள் சொல்லுகின்ற அற்பத்தனத்தால் தெரிந்து கொள்ளலாம். (கோள் சொல்லுகிறவன் கடையன்)

44