பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை அறம்

20. பயன் இல சொல்லாமை (வீண் வார்த்தைகளை பேசாமல் இருப்பது)

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் எல்லாரும் எள்ளப்படும். 191 பலரும் வெறுக்கும்படி, வீண் வார்த்தைகளைப் பேசுகின்றவனை எல்லாரும் இகழ்ந்து பேசுவர்.

பயன் இலன் பல்லார்முன் சொல்லல், நயன் இல நட்டார்கண் செய்தலின், தீது, 192 பலர்முன் வீண் வார்த்தைகளைப் பேசுவது, நண்பர்களுக்குத் தீய செயலைச் செய்வதைவிடத் தீமையானது.

நயன் இலன் என்பது சொல்லும்-பயன் இல

பாரித்து உரைக்கும் உரை. 193 பயனில்லாத வீண் வார்த்தைகளை விரிவாகப் பேசுகின்ற பேச்சே அவன் வீணன் என்பதைக் காட்டி

விடும்.

நயன் சாரா நன்மையின் நீக்கும்-பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லாரகத்து. 194 பயனும், பண்பும் இல்லாத சொற்களைப் பலர்முன் பேசுவது, அறத்தோடு பொருந்தாமல், நன்மை யிலிருந்து நீக்கி விடும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும்-பயன் இல நீர்மை உடையார் சொலின். 195 நல்ல பண்பு உள்ளவர், பயன் இல்லாத சொற்களைச் சொல்லுவாரானால் அவருடைய புகழும் பெருமையும் நீங்கி விடும்.

46