பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை அறம் 23. ஈகை

(வறுமையில் இருப்பவருக்குக் கொடுப்பது) வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து. 221 வறுமையில் வாடுபவருக்கு அவர் வேண்டும் ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதே ஈகை, மற்றவருக்குக் கொடுப்பது எல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.

‘நல்லாறு’ எனினும், கொளல் தீது; மேல் உலகம் இல் எனினும், ஈதலே நன்று. 222 பிறரிடமிருந்து வேண்டிப் பெற்றுக் கொள்வதே நன்மை அடைவதற்கு (விண்ணுலகுக்கு) வழி என்று கூறினாலும் பெற்றுக் கொள்வது தீமையே; கொடுப்பதால் உயர்ந்த விண்ணுலக வாழ்வு, இல்லை என்றாலும் கொடுப்பதே நல்லது.

‘இலன்’ என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான்கண்ணே உள. 223 ஒருவன் வந்து இல்லை என்னும் துன்பமான சொல்லைக் கூறு முன்னே, அவனுக்குக் கொடுத்து உதவுவது நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் காணப்படும் சிறந்த குணம். இன்னாது இரக்கப்படுதல்-இரந்தவர் இன் முகம் காணும் அளவு. 224 உதவி கிடைத்ததும் மகிழ்ச்சி அடைகின்ற மலர்ந்த முகத்தைக் காணும் வரை கையேந்தி வருவோருக்கு ஒன்றும் கொடுக்காமல் அவரைப் பார்த்து இரக்கப்பட்டுக் கொண்டிருப்பது இல்லை என்று பிச்சை எடுப்பதை விடத் துன்பமாகும்.

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்; அப் பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். 225 தவம் செய்கிறவருடைய வலிமை தம்முடைய பசியைப் பொறுத்துக்கொள்வது அதுவும் கூட பசிக்கு உணவு அளித்துத் தீர்த்து வைப்பவருடைய வலிமைக்கு அடுத்தபடிதான்.

52