பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் அதிகாரம் 24

தோன்றின், புகழொடு தோன்றுக! அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று. 236 மக்களாகப் பிறந்தால் புகழ்பெறுவதற்குரிய குணத்தோடு பிறக்க வேண்டும்; அக்குணமில்லாதார் பிறவா திருத்தலே நல்லது.

புகழ்பட வாழாதார் தம் நோவார், தம்மை இகழ்வரை நோவது எவன்? 237 புகழ் உண்டாகும்படி வாழ முடியாதவர், தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிர, தம்மை இகழ்வோரை நொந்து கொள்வது ஏன்?

வசை என்ப, வையத்தார்க்கு எல்லாம்-இசை என்னும் எச்சம் பெறாஅ விடின். 238 தனக்குப்பின், நிலைத்து நிற்கக் கூடிய புகழைப் பெறாதவனுடைய வாழ்க்கையை உலகத்தார் எல்லாரும் பழிப்பார்கள்

வசை இலா வண் பயன் குன்றும்-இசை இலா யாக்கை பொறுத்த நிலம். 239 புகழ் ஏற்படும்படியான காரியங்களைச் செய்யாமல், வாழ்வைப் போக்கியவனுடைய உடம்பைச் சுமந்த நிலம், விளைச்சல் இல்லாமல் குறைந்து போகும்.

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர். 240 பழி ஏற்படாமல் வாழ்கின்றவரே உண்மையில் வாழ்கின்றவர். புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவர், உயிர் இல்லாதவர்.