பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் அதிகாரம் 27

தவம் செய்வார் தம் கருமம் செய்வார்; மற்று அல்லார் அவம் செய்வார், ஆசையுள் பட்டு. 266 தவம் செய்கின்றவர் தமக்கு உரிய கடமையைச் செய்வார். மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு, வீணான காரியத்தைச் செய்கின்றவர்.

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும்-துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு. 267 புடம்போட்டுச் சுடுகின்ற தங்கம் பிரகாசிப்பதைப்போல், தவம் செய்கின்றவரை, துன்பம் வருத்த வருத்த அவருக்கு ஞான ஒளி என்னும் உண்மை உணர்வு அதிகமாகும்.

தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய

மன் உயிர் எல்லாம் தொழும். 268 தவத்தின் வலிமையால் தன் உயிர், தான் என்னும் சுயநலம் நீங்கப் பெற்றவனை எல்லாரும் வணங்குவர்.

கூற்றம் குதித்தலும் கைகூடும்-நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு. 269 தவத்தால் வெற்றி பெற்றவர், நினைத்தபோது உடலை விட்டு உயிரை நீக்கிக கொள்ளக் கூடியவர்; அத்தகையவருக்கு முடிவு செய்ய வருகின்ற எமனைக் கடத்தி வெல்லுதலும் கைகூடும்.

இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார் சிலர்; பலர் நோலாதவர். 270 உலகத்தில் வறுமையாளர் அதிகமாகவும், செல்வர் குறைவாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன என்றால், தவம் செய்கின்றவர் சிலரும், தவம் செய்யாதவர் பலரும் இருப்பதே காரணம்.

61