பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் அதிகாரம் 31

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும் ஏமப் புனையைச் சுடும். 306 கோபம் என்பது, சேர்ந்தவரை அழிக்கக்கூடிய நெருப்புப் போன்றது. அது இன்பம் தரும் தெப்பம் போன்ற, துணையான உறவினரையும் சுட்டு எரித்து விடும் (நெருப்பினும் கோபம் கொடியது). சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு நிலத்து அறைந்தான் கை பிழையாதற்கு. 307 தன்னுடைய வல்லமையைக் காட்டுவதற்காகக் கோபத்தோடு நடந்து கொள்கின்றவன் அழிந்து விடுவான். எப்படி என்றால், நிலத்தை அறைந்தவன் கை தப்பாமல் அடிபட்டு வேதனை அடைவதைப் போன்றது. -

இனம் எரி தோய்வன்ன இன்னா செயினும், புனரின் வெகுளாமை நன்று. 305 கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் தள்ளுவதைப் போன்ற துன்பங்களை ஒருவன் செய்தாலும், கூடுமானால், அவன் மேல் கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது.

உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். 309 ஒருவன் மனத்தாலும் கோபத்தை நினைக்காமல் இருந்தால், அவன் நினைத்த நன்மைகளை எல்லாம் உடனே பெறுவான். - இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. 310 அளவு கடந்த கோபத்தைக் கொள்கின்றவர் செத்தவரைப் போன்றவர், கோபத்தை அடியோடு விட்டவர், துன்பத்தை எல்லாம் விட்டு, இன்ப வாழ்வு பெற்றவரைப் போன்றவர்.

69