பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை அறம்

35. துறவு (ஆசைகளை ஒழித்து விடுவது)

யாதனின் யாதனின் நீங்கியான், நோதல் அதனின் அதனின் இலன். 34 எந்தப் பொருளின் மீதும் ஆசை இல்லாதவனுக்குத் துன்பம் உண்டாகாது. வேண்டின், உண்டாகத் துறக்க, துறந்தபின், ஈண்டு இயற்பால பல. 342 துன்பம் இல்லாமல் இருக்க வேண்டுமானால், எல்லாப் பொருள்களும் இருக்கின்ற காலத்திலேயே, அவற்றில் உள்ள ஆசைகளை விலக்கி விட வேண்டும். அதனால் நன்மைகள் பல உண்டு. அடல் வேண்டும், ஐந்தன் புலத்தை விடல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு. 343 ஐந்து பொறிகளின் வழியே வருகின்ற ஆசையை அடக்க வேண்டும். அவற்றிற்கு ஏற்ற பொருள்களை எல்லாம் ஒருங்கே விட்டு விட வேண்டும்.

இயல்பு ஆகும், நோன்பிற்கு ஒன்று இன்மை; உடைமை மயல் ஆகும், மற்றும் பெயர்த்து. 344 ஆசை இல்லாமல் இருப்பது தவம் செய்கின்றவருக்கு இயல்பு, ஆசை வைத்தால் மீண்டும் மனக்கலக்கத்துக்கு இடம் உண்டாகும். மற்றும் தொடர்பாடு எவன்கொல்? பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. 345 பிறப்பின் பயனையும் அதனால் வரும் துன்பத்தையும் விட்டு விட நினைப்பவர்களுக்கு உடம்பும் கூட ஒரு சுமை ஆகும். அப்படியிருக்க, அதற்கு மேல் வேறு தொடர்பு எதற்காக?

76