பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள் 40. கல்வி (படித்து அறிவு பெறுவது) கற்க, கசடு அற, கற்பவை! கற்றபின், - நிற்க, அதற்குத் தக! - 391 தன்னுடைய குற்றம் நீங்குவதற்காக, சிறந்த நூல்களைத் தெரிந்து எடுத்துப் படித்து அறிவு பெற வேண்டும். படித்த பிறகு, அந்த நூல்களில் கூறியுள்ளபடி நடந்து கொள்ள வேண்டும்.

எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ் இரண்டும் கண் என்ப, வாழும் உயிர்க்கு. 392 எண் என்ற கணக்கும், எழுத்து என்ற இலக்கியமும் ஆகிய இரண்டு கலைகளும், வாழ்கின்ற மக்கள் அறிவு பெறுவதற்கு வழிகாட்டும் இரண்டு கண்களைப் போன்றவை. கண் உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு புண் உடையர், கல்லாதவர். 393 கண் உள்ளவர் என்று சொன்னால், அவர் படித்தவர். படிக்காதவர் என்றால், முகத்தில் இரண்டு புண் உள்ளவர். உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல் அனைத்தே-புலவர் தொழில். 394 மகிழ்ச்சி ஏற்படும்படி, பழகிப் பேசி, பிறகு பிரிந்து செல்லும்போது, “இனிமேல் இவரை எப்போது காண்போம்? என்று ஏக்கத்தோடு நினைப்பது அறிவாளியின் செயல், உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்; கடையரே, கல்லாதவர். 395 பணக்காரர் முன் ஏழை உதவி பெறுவதற்கு நிற்பது போல, படித்தவர் முன் வணங்கி நின்று கற்றுக் கொண்டவர் உயர்ந்தவர். அவ்வாறு, கற்றுக் கொள்ளாதவர் இழிவானவர்.

86