பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

42. கேள்வி

(படித்தவரிடம் கேட்டு அறிவது) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம், அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. 411 செல்வங்களில் சிறப்பான செல்வம் காதால் கேட்டு அறிந்து கொள்ளும் கேள்விச் செல்வமே. இந்தச் செவிச் செல்வமானது எல்லாச் செல்வங்களையும் விட மேலானது. செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது, வயிற்றுக்கும் ஈயப்படும். 412 காதுக்கு, கேட்டு அனுபவிக்கக் கூடிய உணவு இல்லாத போது அதற்கு உதவியாக, உடலை வளர்க்கக் கூடிய வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும். செவியுணவின் கேள்வி உடையார், அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர், நிலத்து. 413 செவி உணவாகிய கேள்வியை உடையவர், இந்த உலகில் வாழ்பவரானாலும் தேவரோடு ஒப்பாவார். கற்றிலன் ஆயினும் கேட்க, அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை. 414 நூல்களைப் படிக்க முடியாவிட்டாலும், படித்தவரிடம் கேட்டு அறிந்து, வளர்த்துக் கொள்ள வேண்டும். அது ஒருவருக்குத் தடுமாற்றம் ஏற்படும் சமயங்களில் தக்க துணையாகும். இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்கம் உடையார் வாய்ச் சொல். 415 ஒழுக்கம் உடைய சான்றோரின் அறிவுரை, சேற்று நிலத்தில் நடக்க உதவும் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

90