பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

43. அறிவு உடைமை (அறிவு உள்ளவராக இருப்பது)

அறிவு, அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள் அழிக்கல் ஆகா அரண். 421 அறிவு, ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடிய ஆயுதம் போன்றது. பகைவராலும் அழிக்க முடியாத உள்பாதுகாப்பு ஆகும். சென்ற இடத்தால் செலவிடா, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது-அறிவு. 422 மனம் போன இடத்தில் போக விடாமல், தீமைகளிலிருந்து விலக்கி, நல்ல வழியில் செலுத்துவதே உண்மையான அறிவு.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது-அறிவு. 423 எந்தப் பொருளைப்பற்றி எவர் சொல்லக் கேட்டாலும், அந்தப் பொருளின் உண்மையான தன்மையை ஆராய்ந்து உணர்வதே அறிவு.

எண் பொருளவாகச் செலச் சொல்லி, தான் பிறர்வாய்

நுண் பொருள் காண்பது-அறிவு. 424 எளிமையாக, பிறருக்குப் புரியும்படி சொல்லுவதும், பிறரிடம் தான் கேட்டவைகளில் சிறந்த பொருளை மட்டும் கண்டு அறிவது அறிவு.

உலகம் தழிஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது-அறிவு. 4.25 உயர்ந்தவரை விரும்பி நட்புக் கொள்ளச் செய்வது அறிவு. அந்த அறிவு. முன்னே மகிழ்ந்து விரிதலும், பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது.

92