பக்கம்:திருக்குறள் எளிய உரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் எளிய உரை பொருள்

45. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியாரைத் தனையாகக் கொள்ளுவது)

அறன் அறிந்து முத்த அறிவு உடையார் கேண்மை, திறன் அறிந்து, தேர்ந்து, கொளல். 44 நன்மையை அறிந்த மூத்தவராய் உள்ள அறிவு உடையவரின் நட்பை, அவருடைய அருமையான திறமையை அறிந்து தேடிப் பெற வேண்டும். உற்ற நோய் நீக்கி, உறாஅமை முன் காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். 442 வந்த துன்பத்தை நீக்கி, இனிமேல் துன்பம் வராமல், முன்னதாகத் தடுக்கக்கூடிய தன்மை உள்ளவரைப் போற்றித் துணையாகக் கொள்ளவேண்டும். அறியவற்றுள் எல்லாம் அரிதே-பெரியாரைப் பேணித் தமராக் கொளல். 443 பெரியோரைப் போற்றி மகிழச் செய்து தனக்கு உறவாக்கிக் கொள்வது, பெறக்கூடிய செல்வங்களில் எல்லாம் மிகச் சிறப்பான செல்வம். தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை. 444 தம்மைவிட வயதில், அறிவில் மூத்த பெரியவரைத் தமக்குத் துணையாகக் கொண்டு, அவர் சொற்படி நடப்பது, எல்லா வல்லமைகளிலும் சிறந்தது. சூழ்வார் கண் ஆக ஒழுகலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல், 445 தகுந்த வழிமுறைகளை ஆராய்ந்து அறிகின்றவர் களைக் கண்ணாகக் கொண்டு உலகம் நடப்பதால், அரசனும் அப்படிப்பட்ட அறிவு உள்ளவர்களைத் துணையாகப் பெறவேண்டும்.

96