பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

திருக்குறள் கட்டுரைகள்

தன் மெய்யில் அழுந்திய வேலையே பறித்துக் கொண்டு பகைவரை அணுகிச் சிரிக்கிறானோ? அவ்விதமாயின் அது பயங்கரச் சிரிப்பு ஆகும்.

இச்சிரிப்பில் அடங்கியிருக்கின்ற பொருள்கள் இவ்வளவுதானோ? இன்னும் என்னனென்னவோ? யாரால் அறிந்து கூற முடியும்? எத்தனையோ சிரிப்புகளைக்கண்டு சிரிப்பாய்ச் சிரிக்கின்ற நமக்கு, இவ் வீரனது சிரிப்பு ஒரு திகைப்பை உண்டாக்கி விடுகிறது.

“மெய் வேல் பறியா நகும்” என்ற நான்கு சொற்களுக்குள்ளாகவே இவ்வாறு கருத்துக்களையும் அடக்கிக் காட்டுகின்ற வள்ளுவரது புலமையும், திறமையும் பாராட்டுதலுக்குரியவையாகும்.

இக்குறளுக்கு உரை கண்ட ஆசிரியர் பரிமேலழகர், ‘தன் கைவேலைக் களிற்றொடு போக்கிய பிறகு. தன்னைக் கொல்ல வரும் மற்றொரு யானையைக் கண்டு தன் மெய்வேலைப் பறித்து நகைத்தான்’ என்று கூறுகிறார். மற்றொரு யானையை அவர் வருவித்துக் காட்டுகின்ற காட்சி குறளைத் தழுவாவிட்டாலும், வீரத்தைத் தழுவி நிற்பதால் வரவேற்கக் கூடியதே யாகும்.

வேல், அம்பு முதலியவைகளைத் தம் உடம்பில் வாங்கித் திருகி எடுத்துத் திருப்பி எறியும் போர்ச் சிறப்பை,

கையில் வாளி தெளித்தபின் காய்ந்துதம்
மெய்யில் வாளிகள் வாங்கி வில் வாங்கினார்.

என்ற வில்லிபாரதத்தினாலும்,

எய்தவன் பகடி யெல்லாம்
பறித்தவன் என்மேல் எய்யும்.

என்ற கம்பராமாயணச் செய்யுளாலும் அறிய முடிகிறது. இதிலிருந்து தமிழ் மக்களின் பேராண்மையும்,போராண்கையும் நன்கு அறியலாம்.