பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருக்குறள் கதைகள் வாழ்க்கைத் துணைவனுக்கிக் கொள்ளத் துடித்தது அவள் உள்ளம். ஆனல், இந்த விஷயத்தை அப்பாவிடம் எப்படிச் சொல்வது ? அதற்குரிய தைரியம் தனக்கு ஏது ? சொன்னல் அதை அவர் எப்படி ஏற்றுக்கொள்வாரோ ? கல்யாணி தன் தாயை நினைத்துக் கண்ணிர் உகுத்தாள். தன் தங்கை அழுது கொண்டிருப்பதைக் கண்ட ராஜாமணி, ' கல்யாணி நீ ஏன் அழுகிருய் ? உன்க்கு என்ன குறை ? அப்பா ஏதாவது சொன்னரா ?’ என்று அன்போடு கேட்டான். அதெல்லாம் ஒன்றுமில்லை...' பின் என்னதான் சொல்லேன் ?" கல்யாணி மெளனமாயிருந்தாள்.

  • சொல்ல மாட்டாயா, கல்யாணி ! உன் சொந்த அண்ணனிடத்தில் கூற முடியாத ரகசியம் அப்படி என்ன இருக்க முடியும் ? -

ஒன்றுமில்லை, அண்ணு எனக்குச் சொல்லவே வெட்கமா யிருக்கிறது : '

  • ஒகோ ! எனக்குப் புரிந்து விட்டது. நடராஜன் விஷயம் தானே ? உனக்கும் அவனுக்கும் உள்ள நட்பு எனக்குத் தெரியும், நடாாஜனே என்னிடம் சொன்னன். அப்பா விடம் இந்த விஷயத்தைச் சொல்லி எப்படியாவது அவரைச் சம்மதிக்க வைக்க வேண்டும். அடுத்த தை மாதத்திற்குள் உனக்கும் நடராஜனுக்கும் கலியாணத்தை முடித்துவிட வேண்டும். அவ்வளவுதான்ே ? அடி அசடே ! இதற்காகவா அழுகிருய் ?’’ - -

கூடத்தில் அப்பா கனேக்கும் சப்தம் கேட்டது. ராஜாமணி : அப்பாவின் கம்பீரமான குரல் கேட்ட மகன் அடக்க ஒடுக்கத்துடன் அவர் முன் போய் நின்ருன்.

  • அங்கே யாருடன் பேசிக் கொண்டிருந்தாய்?"