பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GBru០៣នារី - 45 மாதத்தில் நாலேந்து ஸ்பெஷல் நாடகங்களில் சான்ஸ் கிடைக்கும். அதில் வீட்டு வாடகை, கடைச் சாமான், பள்ளிச் சம்பளம்-இவ்வளவும் கொடுத்தாக வேண்டும். முடியுமா ? இவ்வளவுக்கும் அந்தப் பணம் ஈடு கொடுக்குமா ? கடன்காரர்கள் அவர் கழுத்தை நெரித்தார்கள். ராமண்ணு பல்லேக் கடித்துக்கொண்டு வாழ்க்கைத் தோணியை ஒட்டிக் கொண்டிருந்தார். கடும் புயலும் மழை யும், கடலின் கொந்தளிப்பும் சேர்ந்து அவர் செலுத்திய ஒடத்தை உலுக்கிக் குலுக்கின. - - ராமண்ணுவின் இருண்ட வாழ்க்கையில் ஒரு சிறு வெளிச்சம்மட்டும் தூரத்தில் நட்சத்திரம்போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த ஒளி, அவர் மகனுடைய வருங்காலம் தான். அவன் படிப்பை முடிக்க இன்னும் மூன்று வருடங் களே இருந்தன. அப்புறம் அவன் தன்னைக் காப்பாற்றத் தொடங்கிவிடுவான். மகன் தலையெடுத்து உத்தியோகம் பார்க்கத் தொடங்கி விட்டால் அன்ருேடு தன் கஷ்டங்களெல்லாம், கவலைகளெல் லாம் தீர்ந்து ஒழிந்துவிடும். பின்னர் தன்னையும் தன் நடிப்பையும் கண்டு சிரிக்கும் ஊராரைப்போல் தானும் சிரிக்கலாம். சிரித்துக்கொண்டே இருக்கலாம். இந்த ஒரே நம்பிக்கையுடன்தான் அவர் இத்தனை காலமும், இத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டிருந்தார். - நாலு ஆண்டுகள் நகர்ந்து சென்றன. ராமண்ணுவுக்கு இப்போது வயது கிட்டத்தட்ட ஐம்பதுக்குமேல் ஆகி விட்டது. வறுமையின் மங்கிய ஒளி அவர் கண்களில் பிரதி பலித்தது. முதுமையின் வடு அவர் உடலெங்கும் வியாபித் திருந்தது. - - இன்னும் ஒரு வருஷத்தில் தம் மகன் வேலைக்குப் போக ஆரம்பித்து விறுவான். அன்றே இந்தக் கோமாளித் தொழி லுக்குத் தலை முழுக்குப் போட்டு விடலாம். இந்த ஒரே நம் பிக்கைதான் அவரை வாழ வைத்தது. - ஒரு நாள் காலையில் தலையை வலிக்கிறது என்று சொல்விக்கொண்டிருந்த அவருடைய மகனுக்கு மாலையில் - தி. க.-4