பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 திருக்குறள் கதைகள் பட்டாரு. அவர் செய்யாத குற்றம் நிழல்போல அவருடைய வாழ்நாள் பூராவும் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர் ஆத்மா சாந்தியடையனும் என்பதற்காகவே இந்தச் சங்கத்தை ஒரு வருடம் முன்னடி நான் ஆரம்பிச்சேன். இந்தச் சங்கத்தின் நோக்கம் உங்கள் எல்லாருக்கும். தெரியும்னு நம்பறேன். இதில் வேலை இழந்தவர்களுக்கு மட்டுமே இடம் உண்டு. வேலை விருப்பமில்லாதவர்களுக்கு இங்கே இடம் கிடையாது. அப்படிச் செய்வது சோம்பேறி களுக்கு இடம் கொடுப்பதாகும். குற்றம் செய்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும் இதில் இடம் கிடையாது. அப்படிச் செய்வது குற்றவாளிகளுக்கு இடம் கொடுப்பதாகும். ஒரு குற்றமும் புரியாமல் வேலையினின்று விலக்கப்பட்ட தொழிலாளர்கள் எல்லாருக்கும் இங்கே உதவி கிடைக்கும். ஆனால் இதில் சேருகிறவர்கள் எந்த வேலை செய்யவும் தயாராயிருக்க வேண்டும். தொழிலில் உயர்வு தாழ்வு என்கிற வித்தியாசமே பாராட்டக் கூடாது. அப் பொழுதுதான் நம் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் : நாட்டின் நிலை உயரும். நம் முதலாளி இந்த ஸ்டோரை என் பெயருக்கு எழுதி வைத்துவிட்டுப்போளுர். ஆனாலும் இன்றுவரை இந்த ஸ்டோரை நான் என்னுடைய சொந்தமாகக் கருதவில்லை. இந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்காகவே அதில் வரும் இலாபத் தைப் பயன்படுத்தி வருகிறேன். முதலாளி உயிரோடு இருந்: தால் என்னுடைய இந்தக் காரியத்தை ஆமோதிப்பார் என்ற நம்பிக்கையுடனேயே இதையெல்லாம் செய்து வருகிறேன். - 'அந்த உத்தமரின் நினைவு நம் எல்லாருடைய உள்ளத் திலும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேக மில்லை' என்று சுருக்கமாகவும். உருக்கமாகவும் பேசி முடித் தான். நாராயணசாமி. அவன் பேச்சு முடிந்ததும் கூட்டத் திலிருந்த அனைவரும் எழுந்து தலை, வணங்கி நின்றனர். ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த கண்ணம்மாவின் கண்களி லிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது.