பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
117


கருத்துப் பிழைபடப் பேசிவிட்டால் அறிவு நிரம்பியவன் என்று மதிக்கமாட்டார்கள். மேலோர் சிறிது ஒழுக்கம் குன்றினாலும் அவர்களுக்கு இழுக்கு ஏற்பட்டு விடும். அதுபோலத்தான் கருத்தில் பிழைகள் ஏற்படுதல். கற்று அறிந்த அறிஞர் திறம்படப் பேசினால் பேசுபவனின் கல்வி, புலமை வெளிப்படும்; அத்தகைய அவைகளில் பேசுவது சிறப்பு ஆகும். அதனால் ஒருவனுக்குப் புகழும் மதிப்பும் உண்டாகும் -

அறிவு மிக்க மேதைகள் கூடி இருக்கும் அவையில் அவர்களுக்குத் தெரிந்தவற்றையே பேசுவது மிகையாகும். இது மழைநீர் பட்டுத் தானாக வளரும் பயிர்களுக்குக் குடத்தில் நீர்கொண்டு பாய்ச்சுவது போல ஆகும்.

அறிஞர் அவையில் அறிவிக்க வேண்டிய அதி அற்புதமான செய்திகளை, அவற்றைப் புரிந்துகொள்ள முடியாத சாமானியர்களிடையே பேசிக் காலத்தை வீண் படுத்தாதே; பசி இல்லாதவருக்கு இடும் உணவு அஃது ஆகும். அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது; மறந்தும் அவர்களிடம் கடினமான கருத்துகளைக் கூறாதே.

தாம் கூறுபவற்றைச் செவிமடுத்து அவற்றை ஏற்கும் நிலையில் இல்லாதவரிடம் அரிய கருத்துகளைக் கூறுவது அமுதத்தைக் கொண்டுபோய்க் கழிநீர்க் கால்வாயில் கொட்டுவதுபோல் ஆகும்.

73. அவை அஞ்சாமை
(சபைக்கு அங்சாமை)

கொச்சைத் தமிழில் பேசித் தன் இச்சைப்படி கருத்துகளைக் கூறினால் யாரும் அவனை நச்சமாட்டார்கள். தூய