பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
146

தான். இந்தப் பழக்கம் உடையவர் பொருளை வைத்துக் காப்பாற்றமாட்டார்கள்.

‘திருமகள் இல்லம்’ என்று வெளியே இதற்கு முன் எழுதி இருந்தான்; அதற்கு வேலையே இல்லை. செல்வம் அங்குக் குடியிருக்க மறுத்துச் செல்விகளை நாடிச் சென்றுவிடுகிறது. இத் தீய பழக்கம் உடையவர் வாழ்வு கருகிவிடும்

93. கள் உண்ணாமை

“குடிகாரன் நாலு தட்டுத் தட்டினாால் விழுந்து விடுவான்; அவனைக் கண்டு பயப்படத் தேவை இல்லை” என்று செர்ல்வார்கள். பகைவர்கள் இவனைக் கண்டு பயப்படவே மாட்டார்கள்.

படித்து இருக்கிறான்; திறமைசாலி; நன்றாக உழைப்பான்; என்ன பயன்? சாயுங்காலம் ஆனால் அது போடாமல் அவனால் இருக்க முடியாது. “குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு” என்று சொல்லுவார்கள்.

அறிஞர்கள் கூடிய சபையில் குடித்துவிட்டு ஒருவன் பேச முடியாது; அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடுவர்.

பெற்ற தாய்; தன் மகன் சான்றோன் ஆவான் என்று எதிர்பார்த்தாள்; வல்லவனாக வளர்வான் என்று எதிர் பார்த்தாள்; ஆடி அசைந்துகொண்டு வருகிறான்; நாடி தளர்ந்து நின்றுகொண்டு ‘ஏடி வாடி போடி’ என்ற சொற்களை உதிர்க்கிறான். “அடப்பாவி உன்னைப் பெற்றேன்; இந்த வயிறு புலி கிடந்த வயிறு என்று பெருமைப்