31. வலி அறிதல் தம் வலிமையினையும் பிறர் வலிமையினையும் அறிதல். நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். - (ப-உ) கொம்பர் நுனி-ஒரு கிளையின் நுனியிலே, எறினார். எறிச் சென்றவர்கள் அஃது இறந்து-அந்நுனிக் கிளையினையும் தாண்டி, ஊக்கின்-அப்பால் செல்ல முயல்வாராயின், உயிர்க்கு -அவர் உயிருக்கே, இறுதி-சாவு, ஆகிவிடும்-உண்டாகிவிடும். (க.உ) அளவுக்கு மீறாமல், தம் வலிமை யறிந்து எதையும் செய்ய வேண்டும். இறுதி-எழுவாய் ஆகி விடும்-பயனிலை. 32. காலம் அறிதல் காரியம் செய்வதற்கு ஏற்ற நேரத்தை அறிதல். பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (ப-உ) காக்கை-காக்கையானது, கூகையை-தன்னைக் காட்டிலும் வலிமையுடைய கோட்டானை, பகல் வெல்லும்-பகல் காலத்தில் வென்று விடும். (அது போலவே) இகல் வெல்லும் -பகைவரது மாறுபாட்டை வெல்லக்கருதுகின்ற, வேந்தர்க்குஅரசர்க்கு, பொழுது வேண்டும்-அதற்கேற்ற காலம் வேண்டும். (க.உ) எவரும் தமக்கேற்ற காலம் அறிந்து செய்யின் காரியம் கை கூடும். பொழுது-எழுவாய் ; வேண்டும்-பயனிலை. 22
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/22
Appearance