பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை இன்பம் தகையணங்குறுத்தல் (அழகு வருத்தல்) தெய்வமோ மயிலோ தோடணிந்த பெண்னே என்று என் நெஞ்சம் மயங்கும். பார்த்தவள் மேலும் எதிர்ப்பார்வை பார்த்தல் கொடுந்தெய்வம் சேனையோடு தாக்கியதுபோல், 1082 கூற்றை முன்பு கண்டறியேன். இன்றறிந்தேன்; 1081 பெண்மையும் பெருங்கண்ணும் உடையது. 1083 பார்த்தவரின் உயிர்குடிக்கும் கவர்ச்சிகொண்டு பெண்ணின் கண்கள் போர்செய்கின்றன. 1084 இது TDGar கண்தானோ பெண்மானோ இவள் பார்வையில் இம் முக்குணமும் உண்டு. 108; வளைந்த புருவம் நேர்நின்று தடுப்பின் இவள் கண்கள் என்னை நடுக்கா. 1086 கைபடாத முலைமேல் கிடக்கும் மெல்லாடை மதயானைக்கு இட்ட முகமூடி போலும். 1087 போரில் வராதவரும் அஞ்சும் என் ஏற்றம் இந்த நெற்றி யழகுக்கே உடைந்து விட்டதே! 1088 மான்பார்வையும் வெட்கமும் உடையவளுக்கு வேறு அணிகள் போடுதல் எதற்கு? 1089 ಹ6 குடித்தால்தான் மகிழ்ச்சிதரும் காமம்போல் பார்த்தளவில் மகிழ்ச்சி தருமா? 1090 - 222 o களவியல் அதிகாரம் 109 தகையணங்குறுத்தல் அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு 1081 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. 1082 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. 1083 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். 1084 கூற்றமோ கண்ணோ பிணையோ, மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. 1085 கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்களுர் செய்யல மன்இவள் கண். 1086 கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். 1087 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு. 1088 பிணையேர் மடநோக்கும் நானும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து. 1089 உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. 1090 223