பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் கல்லாமை பலநூல் அறிவின்றி அவை யேறுதல் அரங்கின்றிக் காய் உருட்டுவது போலும். 401 படிப்பு இல்லாதவன் பேச விரும்புதல் முலையில்லாதவள் இன்பம் விழைவது போலும், 402 கற்றவர்முன் பேசாது அடங்கி இருப்பரேல் கல்லாதவரும் மிக நல்லவர் ஆவர். 403 கல்லாதவன் உடைய இயற்கையறிவு கூர்மை யாயினும் அறிஞர் கொள்ளார். 404 கற்றவரோடு கலந்து உரையாடிய அளவில் கல்லாதவன் மதிப்புக் கரைந்து போகும். 405 உயிரோடு இருக்கிறார் எனலாமே யன்றிக் கல்லாதவர் களர்நிலம் பே ான்றவர். 406 துண்மை மாட்சி கூர்மை பொருந்திய அறிவு இல்லாதவன் அழகு நிறப்பொம்மை போலும், 407 படித்தவர் எய்திய வறுமையைக் காட்டிலும் படியாதவர் எய்திய செல்வம் கேடாகும். 4.08 கல்லாதவர் உயர் குடியிற் பிறந்திருப்பினும் தாழ்குடியிற் பிறந்த அறிஞர்க்கு ஒவ்வார். 4.09 விலங்கும் மக்களும் வேற்றுமை எவ்வளவு அவ்வளவு கற்றாரும் கல்லாரும். 410 34 அரசியல் - அதிகாரம் 41 - கல்லாமை அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல், 401 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402 தல்லாதவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்க்ப் பெறின். 403 தல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடையர்ர். 404 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லர்ட்ச் சோர்வு படும். 405 உளரென்னும் மாத்திரையர் அல்லார் பயவாக் களரனையர் கல்லா தவர். 406 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புன்ைபாவை யற்று. 4O7 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. 408 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலிர் பாடு. 409 லிலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். 410 & 85