பக்கம்:திருக்குறள் தெளிவுரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவுரை பொருள் அரண் போர்மேற் செல்வார்க்கும் மதில்வேண்டும்; அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது வேண்டும். 74.1 அகழியும் வெட்டவெளியும் மலையும் செறிந்த காடும் சேர்ந்தது அரணாகும். 742 உயரம் அகலம் உறுதி அருமை நான்கும் அமைந்ததே அரண் என்று நூல்கூறும். 7.43 காக்கும் அளவு சிறிதாய் இடம்பெரிதாய்ப் பகைவரின் எழுச்சியை மழுக்குவதே அரண். 744 பிடிப்பதற்கு அரியதாய் உணவு நிறைந்ததாய் உள்ளிருப்பவர் செயலுக்கு எளியதே அரண். 745 எல்லாப்பொருளும், இடத்துக்குக் கொண்டுபோய் உதவும் நல்லாளும் உடையதே அரண். 746 வளைந்தோ திடீரெனத் தாக்கியோ வஞ்சித்தோ பிடிக்க முடியாதது அரண். 747 வலுவாகச் சூழ்ந்து வளைத்தவரையும் நிலைதளராது நின்று வெல்வதே அரண். 748 போர்முனையில் பகைவர் ஓடுமாறு போர்வினையில் பெருமிதச் சிறப்புடையதே அரண். 749 அரண் எவ்வாற்றல் உடையதாக @ു பேராற்றல் இல்லாதார்க்குப் பயன் இல்லை. 750 152 அரணியல் அதிகாரம் 75 அரண் ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் ப்ோற்று பவர்க்கும் பொருள். 741 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் - 7 காடும் உடையது அரண். உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் 42 அமைவரண் என்றுரைக்கும் நூல். 743 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண். 744 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண். 745 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். 746 முற்றியும்.முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண். - 747 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண். 748 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண். 749 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். 750 153 11 -