பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113

(யாசிப்பவர்களுக்கு) ஈதலினைக் செய்வதனால் ஒருவற்கு உண்டாகும் புகழேயாகும்.

3. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்.

(ப-ரை ஒன்றா - தனக்கு ஒப்பில்லாத, உயர்ந்த, உயர்வான புகழ் - புகழ், அல்லால் - அல்லாமல், உலகத்து - இவ்வுலகிலே, பொன்றாது . அழிவில்லாமல், நிற்பது - நிலைத்து நிற்பது, ஒன்று இல் பிரிதொன்று இல்லை.

(கரை) நிகரில்லாத ஒங்கிய புகழல்லாமல் இந்த உலகத்தில் அழியாமல் நிற்பது வேறு எதுவும் இல்லை.

4. நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு. (ப-ரை நிலவரை - பரந்த இப்பூமியின் எல்லைக்குள், நீள் - அழியாது நிற்கும், புகழ் புகழினை, ஆற்றின்ஒருவன் உண்டாக்கிக் கொள்ளுவானாகில், புத்தேள் உலகம் - தேவர்கள் உலகமானது, புலவரை - தன்னிடம் வந்த புலவர்களை, போற்றாது - போற்றிப் பாராட்டாது. (க-ரை) ஒருவன் இப்பூமியின் எல்லைக்குள் அழியாத புகழினை உண்டாக்கிக் கொள்ளுவானேயானால், புத்தேள் உலகம் அவனை யல்லாமல் வருகின்ற புலவர்களைப் பாராட்டாது,

5. கத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது.

(புரை நத்தம் ஆகும்) - புகழுடம்பிற்குப் பெருக்க மாகும், கேடும் - கெடுதியும், உளது . அப்புகழ் உடம்பு நிலைத்து நிற்பதற்கு, ஆகும் . ஆகின்ற, சாக்காடும் இறத்தலும், வித்தகர்க்கு சிறந்த ஆற்றல்iபடைத்தவர்க்கு, அல்லால் - அல்லாமல், அரிது - மற்றையோருக்கு முடியாத தாகும். (போல் அசை நிலை.!

தி. தெ.-8