பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவற இயல்

25. அருள் உடைமை

(உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டிருத்தல்)

1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

|ப-ரை) செல்வத்துள் - செல்வங்கள் பலவற்றிலும், செல்வம் . மேலான செல்வம் என்பது, அருட்செல்வம் . அருளால் வருகின்ற செல்வமேயாகும், பொருட்செல்வம். பொருளால் வரும் செல்வங்கள் என்பவை, பூரியார் கண்ணும்-உள இழிந்தவர்களிடத்திலும் உண்டு.

(க-ைர) செல்வங்களுக்குள் சிறந்த செல்வமானது அருளால் வரும் செல்வமேயாகும். அதுவல்லாமல், பிற செல்வங்கள் பொருளால் வருபவை, இழிந்தவர்களிடத் திலும் இருப்பதாகும்.

2. கல்ஆற்றான் காடி அருள் ஆள்க; பல்ஆற்றான்

தேரினும் அ.தே துணை.

(ப.ரை நல்லாற்றான் . நல்ல நெறிகளிலே கண்டு, நாடி - ஆராய்ந்து, அருள் - அருளினை, ஆள்க - உடைய வர்களாக ஆகுக, பல் - பல வகைப்பட்ட, ஆற்றான். நெறிகளில், தேரினும் - ஆராய்ந்து பார்த்தாலும், துணை - துணையாக இருப்பது, அஃதே - அந்த அருளேயாகும்.

(கரை) பல நெறிகளிலும் நின்று ஆராய்ந்து, அருளி னைத் துணையாகக் கொள்ளுவார்களாக: துணையான