பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. கூடாவொழுக்கம்

(தவத்தோடு பொருந்தாத சிற்றின்ப இச்சையால் தீமை புரிதலாம்)

1. வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

(ப-ரை வஞ்ச - வஞ்சனையான, மனத்தான் மனத் தினையுடைய வன்செய்யும், படிற்று - மறைந்த, ஒழுக்கம். திய ஒழுக்கத்தினை, பூதங்கள் - உடம்பாகவே அவனுடன் இருக்கும் பூதங்கள், ஐந்தும் - ஐந்தும், அகத்தேநகும். தமக்குள்ளே நகைத்துக் கொள்ளும்.

(க-ரை வஞ்சனை பொருந்திய மனத்தினை உடைய வனது மறைவான தீய ஒழுக்கத்தினைக் கண்டு அவனோடு கலந்து நிற்கின்ற ஐந்து பூதங்களும் தம்முள்ளே நகைக்கும்.

2. வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்

தான் அறி குற்றப் படின்.

(ப-ரை) தான் - தான் நன்கு அறிந்த, குற்றம் - குற்றத்தினிடத்தே, தன் - தனது,நெஞ்சம் - நெஞ்சமானது, படின் - தாழ்ந்து விடுமானால், வான் வானம் அளவு, உயர் . உயர்ந்த, தோற்றம் - சிறப்பான வேடத் தோற்ற மானது, எவன் . என்ன பயனை, செய்யும் - செய்ய முடியும்?

(க-ரை) தான் குற்றம் என்று அறிந்த அதனைச் செய்ய தனது நெஞ்சம் போய்த் தாழ்ந்து விடுமானால் வானம் அளவு உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்?

3. வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்க் தற்று.

(ப-ரை) வலி - மனத்தினை அடக்கும் வலிமை, இல் - பெற்றிராத, நிலைமையான் - தன்மையினையுடையவன்,