பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

ஆற்றல் - ஆற்றலாகிய தவச் சிறப்பினை, புரிந்தார் கண் - விரும்பிச் செய்கின்ற துறவிகளிடத்தில், இல்-இல்லையாகும்.

(க-ரை) களவு என்று சொல்லப்படுகின்ற மயக்கமான அறிவானது, உயிர் முதலியவற்றை அளத்தல் ஆகிய தவம் என்னும் பெருமையினை விரும்பினவர்களிடத்தில் இல்லை.

8. அளவறிந்தார் கெஞ்சத்து அறம்போல கிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.

{ப-ரை) களவு - களவு செய்தவனை, அறிந்தார் - அறிந்தவரது, நெஞ்சில் - நெஞ்சத்தில், கரவு - வஞ்சனை யுடைய எண்ணம், அளவறிந்தார் - அளவினையறிந்த துறவிகளையுடைய, நெஞ்சத்து - நெஞ்சினில், அறம்போல். அறம் நிலைத்து நிற்பது போல, நிற்கும் - நிலை பெற்று நிற்பதாகும்.

(க-ரை) உயிர் முதலானவற்றை அளக்கும் தவத் தினைப் பயின்றவர்கள் நெஞ்சத்தில் அறம் நிலை பெற்று நிற்கும். களவினையே பயின்றவர் நெஞ்சத்தில் வஞ்சனை நிலை பெற்று நிற்கும்.

9. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.

(ப-ரை) களவு - களவு, அல்ல - அல்லாத, மற்றையபிறவற்றை, தேற்றாதவர் - அறிந்திராத கள்வர்கள், அளவல்ல - அளவு கடந்த தீய எண்ணங்களை, செய்து, எண்ணி, ஆங்கே - அந்தப் பொழுதே, வீவர் . கெட்டுவிடு

வார்கள். -

(க-ரை) கள்ளத்தனம் அல்லாத பிறவற்றை அறியா

தவர்கள் அறவற்ற தீய நினைவுகளைச் செயலாற்ற தினைத்து அந்தப் பொழுதே கெட்டு விடுவார்கள்.