பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். (622),

திருக்குறளில் காணப்படும் நான்கு அதிகாரங்களையா வது நாள்தோறும் ஒருமுறையேனும் படித்து உள்ளத்தினை வலிமை பெறச் செய்து கொள்ளல் வேண்டும். ஊக்க முடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக் கண் அழியாமை என்ற அதிகாரங்களின் கருத்துரைகள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எந்த நேரத்திலும் ஒலித்துக் கொண்டே இருப்பதாகுக.

உள்ளத்தில் தோன்றுகிற எண்ணங்களுக்கு மிகுந்த வலிமையுண்டு என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். எண்ணிய எண்ணங்களைத் திண்மையுடன் செயல் படுத்துதல் வேண்டும். எண்ணிய எண்ணங்கள் நடை பெறுமா என்ற ஐயமே எழுதல் கூடாது. எண்ணியர் திண்ணியராக இருத்தல் வேண்டும். எண்ணியபடியே அடைவோம் என்ற உறுதிப்பாட்டுடன் வெற்றி பெற வேண்டும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். (666)

நிறைந்த கல்வியும் அறிவும் புத்திசாலித்தனமும் பெற்றிருந்தாலும் மனித குணம் என்கிற பண்பாடு இல்லையென்றால் அப்படிப்பட்டவர்கள் ஒரறிவுள்ள மரத்திற்குச் சமம் என்று கூற ஆசிரியர் தயங்கவில்லை. மரத்திற்குச் சமமானவர்கள் என்று கூறுவதெல்லாம் மக்கள் பண்பாடு இல்லாதவர்களேயாவார்கள். மனிதத் தன்மை இல்லையென்றால் அவர்கள் பெற்றிருக்கும் பிற ஆற்றல்கள் தீமையினையே செய்வனவாகும்.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் (997) மக்கட்பண்பு இல்லா தவர்.

தி, தெ.-!