பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

இடத்த-மெய்ம்மையான சொற்களின் இடத்தில் வைத்துக் கருதப்படுவனவாகும்.

(க-ரை) பிறர்க்குக் குற்றம் நீங்கிய 5. ສ່ພoລາສ, தருமானால் பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற். களின் இடத்தில் வைத்துக் கருதப்படும்.

3. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

ப-ரை) தன் - தன்னுடைய, நெஞ்சு - நெஞ்சத்தி' னால், அறிவது - அறிந்து கொண்டிருப்பதனை, பொய்யற்க . மற்றவர் அறியாரென்று எண்ணினாலும் பொய் பேசாதிருத்தல் வேண்டும், பொய்த்த பின் - அப்படி பொய்யாகச் சொல்லுவானே யானால், தன் - தன்னுடைய, நெஞ்சு நெஞ்சமே, தன்னைச்சுடும் . தனக்குத் துன்பக் தினைக் கொடுத்து விடும். ... . . .

(கரை) ஒருவன் தனது நெஞ்சு அறிந்த பொய்யினைச் சொல்லாதிருப்பானாக அவ்வாறு பொய்த்துப் பேசினால், அவனுடைய நெஞ்சமே அவனைத் துன்பத்தில் அடைவிக்கும்.

4. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன். - (ப-ரை உள்ளத்தால் . ஒருவன் தனது மனதறிய, பாய்யாது பொய் கூறாமல், ஒழுகின் - நடந்து வருவானாகில், உலகத்து சீரிய மக்கள், உள்ளத்துள் - உள்ளங்களில், எல்லாம் . எல்லாம், உளன் - உள்ளவ. னாவான், இருப்பவனாவான். . -

(க-ரை ஒருவன் தனது மனதறிய பொய் கூறாமல்

நடந்து கொள்வானானால், அவன் உயர்ந்தோர் உள்ளங்: களில் எல்லாம் உள்ளவனாவான்.