பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

சினம்காக்க - சினம் வராதபடிகாத்துக்கொள்ள வேண்டு , காவாக்கால் - அவ்வாறு காப்பாற்றானாகில், சினம் . அச்சினமானது, தன்னையே கொல்லும் தன்னையே கெடுத்துவிடும்.

(கரை) தணக்குத் துன்பம் வராமல் காத்துக்கொள்ள நினைப்பாணானால், தன் மனத்தில் கோபம் வராமல் காத்தல் வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிடில் தன்னையே அக்கோபம் கெடுத்துவிடும்.

6. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புனையைச் சுடும்.

(ப-ரை சினம் (கோபம்), என்னும் - என்று கூறப் படும், சேர்ந்தாரைக் கொல்லி - நெருப்பு, இனம் - இனம், என்னும் - எனப்படும், ஏமப் புணையை - தனக்கு நல்லன. வற்றைச் செய்கின்ற பாதுகாப்பான மரக்கலத்தினையும், கடும் - சுட்டுவிடும்.

|கரை) சினம் என்னும் நெருப்பு தன்னை உண்டாக் கியவரையே அல்லாமல் அவருக்கு இனம் என்னும் பாது காப்பாகிய மரக்கலத்தினையும் சுடும்.

7. சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு

கிலத்துஅறைந்தான் கைபிழையா தற்று. (ப-ரை) சினத்தை - சினத்தினை, பொருள். தனக்கு ஏற்ற குணம், என்று - என்பதாக, கொண்டவன் கொண் டிருப்பவனுடைய, கேடு - அழிவானது, நிலத்து அறைந் தான் . நிலத்தில் அறைந்தவனுடைய, கை . கையானது, பிழையாதற்று - தப்பிவிடாதது போன்றதாகும்.

(கரை) நிலத்தினை அறைந்தவனுடைய கையானது அந்த நிலத்தினையடைதல் தப்பாதவாறு போல, னைத்தையே தனக்குக் குணமாகக் கொண்டிருப்பவன் கெடுவது உறுதி.