பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

நோய் . துன்பங்களை, செய்யார் . மற்ற உயிர்களுக்குச் செய்யமாட்டார்கள்.

|கடரை) துன்பமெல்லாம், பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்தவர் மேலதேயாகும். ஆதலால், தம் உயிர்க்குத் துன்பம் வேண்டாதவர்கள் பிறிதோர் உயிர்க்குத் துன்பம் செய்யமாட்டார்கள்.

33. கொல்லாமை

(எவ்வுயிரினையும் கொல்லாதிருத்தலாகும்)

1. அறவினை யாது.எனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும். (ப-ரை) அறவினை - அறமான செயல், யாது - எது, எனின் - என்று கேட்டால், கொல்லாமை கொல்லாமை யேயாகும், கோறல் - அப்படிக் கொல்லுதல் என்பது, பிறவினை எல்லாம் - ைேமயான எல்லாவற்றையும், தரும் . அஃதொன்றே தந்துவிடும். .

(கரை) அறம் ஆகிய செய்கை பாது என்று கேட்டால் அஃது ஒர் உயிரையும் கொல்லாமையேயாகும். அவ்வாறு கொல்லுதல் தீமையான செயல்கள் பலவற்றையும் கொடுக்கும்,

2. பகுத்துஉண்டு பல்உயிர் ஒம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (ப-ரை) பகுத்து - பலருக்கும் கொடுத்து, உண்டு . தானும் உண்டு, பல் - பல, உயிர் - உயிர்களையும், ஒம்புதல் - காப்பாற்றுதல், நாலோர் - அறநூலுடையோர், தொகுத்தவற்றுள் தொகுத்துக் கூறிய, எல்லாம். எல்லா அறங்களிலும், தலை . மேலான அறமாகும்.

(கரை) உண்பதனை பலருக்கும் பகுத்துக் கொடுத்து தானும் உண்டு எல்லா உயிர்களையும் காப்பாற்றுதல்,