பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

(க-ரை) பேச முடியாதபடி நாவினை அடக்கி விக்குன் எழுவதற்கு முன்னமேயே அறச் செயலானது விரைவாகச்

செய்யப்படுதல் வேண்டும்.

6. கெருகல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் உலகு.

(ப-ரை) ஒருவன் - ஒருவன், நெருநல் நேற்றைய தினம், உளன் - இருந்தான், இன்று இல்லை - இன்றைய தினம் இல்லாமற் போனான், என்னும் - என்று கூறப்படும், பெருமை - நிலையாமை மிகுதியினை, உடைத்து - உடைய தாகும், இவ்வுலகு இந்த உலகம்.

(கரை) ஒருவன் நேற்றைய தினம் இருந்தான்: இன்றைய தினம் இல்லாமற் போனான் என்று கூறப்படும் நிலையாமை மிகுதியினை உடையதாகும் இல்வுலகு.

7. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல. :ப-ரை) ஒருபொழுதும் . ஒரு பொழுதளவு கூட, வாழ்வது - உயிரும் உடம்பும் சேர்ந்து வாழ்வதனை, அறியார் - அறிந்துகொள்ள முடியாதவர்கள், கோடியும் - சோடி அளவும், அல்ல - அல்லாமல், பலகருதுப - அதனை விட எண்ணிறந்த எண்ணங்களை எண்ணுவார்கள்.

(க-ரை) ஒரு பொழுதளவும் தமது உயிரும் உடம்பும் சேர்ந்து வாழ்வதனை அறிய மாட்டாதவர்கள் கோடி யளவும் அல்லாமல் அதனினும் பலவாய நினைவுகளை நினைக்கின்றனர்.

8. குடம்பை தனித்துஒழியப் புள்பறக் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு. |ப-ரை உடம்போடு - உடம்பினோடு, உயிரிடை -

உயிருக்கு ஆண்டாகிய, நட்பு - நட்பானது, (எது போன்றது என்றால்) குடம்பை - முட்டையானது, தனித்து-தனியாக,