பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

35. துறவு

(செல்வத்தினிடத்தும் உடம்பினிடத்தும் பற்றினை விடுதலாகும்)

1. யாதனின் யாதனின் நீங்கியான் கோதல்

அதனின் அதனின் இலன்.

|ப-ரை) யாதனின் யாதனின் யாதொரு பொருளின் யாதொரு பொருளின், நீங்கியான் - ஆசைவிட்டு நீங்கியவன், அதனின் அதனின். அந்தந்தப் பொருளினாலே வருகின்ற, நோதல் இலன் - துன்பம் அடைதல் இல்லாதவ னாவான்.

கே.ரை) ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு

பொருளின் பற்றற்று நீங்கினானோ அவன் அந் தந்தப்

பொருளால் வரும் துன்பத்தினையடைதல் இல் லை

யாவான்.

2. வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டியற் பால பல.

(ப.ரை) துறந்த - பொருள்களின்மீது ஆசைகளை விட்ட, பின்-பிறகு, சண்டு - இப்பிறப்பினில், இயற்பால. உண்டாகக் கூடிய, பல - இன்பங்கள் பலவாகும். வேண்டின் . அந்த இன்பங்களை விரும்பினால், உண்டாக. தக்க காலத்தில், துறக்க - அந்தப் பொருள்களைத் துறந்து. விடுதல் வேண்டும்.

(கரை) எல்லாப் பொருள்களையும் துறந்து. விட்டால் ஒருவனுக்கு உண்டாகும் இன்பங்கள் பலவாகும். அவ்வின்பங்களை விரும்பினால் அவற்றைக் காலமறிந்து துறத்தல் வேண்டும்.