பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

பேரின் பம், என்னும்.எனப்படும், செம்பொருள்-செம்மைப் பொருளினை, காண்பது அறிவு . காண்பதே மெய்யுணர் வாகும். -

(க-ரை) பிறப்பிற்கு முதற்காரணமாக அஞ்ஞானம் நீங்க, பேரின்ப வீட்டுலகத்திற்குக் காரணமான பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வு என்பதாகும்.

9. சார்பு உணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்று அழித்துச்

சார்தரா சார்தரு நோய்,

(ப-ரை) சார்பு . பொருள்களுக்கெல்லாம் சார்பாகிய செம் பொருளினை, உணர்ந்து உணர்ந்து, சார்பு . பற்றுக் கள் எல்லாம், கெட ஒழுகின் . கெட்டுப் போகுமாறு நடந்து கொண்டால், சார்தரும் . அவனைச் சார்ந்து நின்ற, நோய். துன்பங்கள், அழித்து உணர்வு ஒழுக்கம் இவைகளை அழித்து, மற்று - பின்பு வந்து, சார்தரா - அவனைச் சேராதவைகளாகும்.

(க-ரை) ஒருவன் எல்லாப் பொருள்களுக்கும் சார்பான அச்செம்பொருளினை உணர்ந்து பற்று நீங்க ஒழுகினால் அவனை முன்பு சாரக் கடவனவாக இருந்த துன்பங்கள் அவ்வுணர்வினை அழித்துப் பின் சாரமாட்டாவாம்.

10. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

நாமம் கெடக்கெடும் கோய், (ப-ரை) காமம் - விருப்பம், வெகுளி - வெறுப்பு,

மயக்கம் - அஞ்ஞானம் (என்று கூறப்படுகின்ற) இவை மூன்றன் - இந்த மூன்று குற்றங்களின், நாமம் - பெயர் களும், (ஞான நிலை அடைத்தோர்க்கு) கெட - கெட்டு விடுவதால், நோய்கெடும்.அவற்றினாலான வினைப் பயன் கள் கெட்டுவிடும்.

(க-ரை) ஞானவுணர்வில் முதிர்ச்சி பெற்றவர்களுக்கு, விருப்பு, வெறுப்பு, அஞ்ஞானம் ஆகிய குற்றங்கள் மூன்ற னுடைய பெயர்களும் கூடக் கெடுதலால், அவற்றின் காரிய மாகிய வினைப்பயன்களும் உளவாகாவாம்!