பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர். 395

(ப-ரை) உடையார் - செல்வந்தர், முன் - முன்னே. இல்லார்போல் - பொருளில்லாத வறிஞர் போல, ஏக்கற்றும்-தாழ்ந்து நின்று, கற்றார் - கற்றவர்களே, சிறந் தோரா வார், கல்லாதவர் - அவ்வாறு கல்லாதவர்கள், கடையரே. தாழ்ந்தவரேயாவார்.

(கரை) செல்வர்கள் முன்னே வறியவர்கள் நிற்றல் போல, தம்முடைய ஆசிரியர் முன்னே நின்று கல்வி கற்றவர்களே உயர்ந்தோராவர். அவ்வாறு கற்பதற்கு நாணமுற்றுக் கல்லாதவர்கள் இழிந்தோரேயாவர்.

6. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு. - 396

(ப-ரை மணற்கேணி மணலின்கண்னேயுள்ள கேணியானது, தொட்டனைத்து - தோண்டிய அளவுதான், ஊறும் - நீரானது சுரக்கும், (அதுபோல) மாந்தர்க்கு - மக்களுக்கு, அறிவு - அறிவானது, கற்றனைத்து . கற்ற

அளவுதான், ஊறும் . சுரக்கும். -

|க-ரை) மணலின்கண் இருக்கும் கேணியானது தோண்டிய அளவுதான் நீரினைச் சுரக்கும். மக்களுக்குக் கற்ற அளவுதான் அறிவு சுரக்கும்.

7. யாதானும் நாடுஆமால் ஊர்ஆமால் என்ஒருவன் -

சாந்துணையும் கல்லாத வாறு. 397

(ப-ரை) யாதானும் - கற்றவனுக்கு எந்த ஒரு நாடும், நாடாம் . தன்னுடைய நாடாகும், ஊராம் . தன்னுடைய ஊராகும், (அப்படியிருக்க சாந்துணையும் - இறப்பு வரும் வரையிலும், ஒருவன் கல்லாதவாறு - ஒருவன் கல்லாமல் காலம் கழிப்பது, என் - என்ன கருதி.