பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

ஆல்வி - கல்வியாகும், மற்றையவை . மற்ற செல்வங்கள், மாடு - பெருமையுடையவை, அல்ல - அல்ல.

|க-ரை) ஒருவனுக்கு அழியாத சீரிய செல்வமானது கல்வியேயாகும். அஃது அல்லாமல் மற்றைய செல்வங்கன் எல்லாம் பெருமையானவை அல்ல.

41. கல்லாமை

(கல்வி இல்லாமையின் இழிவு)

1. அரங்குஇன்றி வட்டாடி அற்றே கிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல். 40+

(ப ரை) நிரம்பிய - தன் அறிவு நிரம்புவதற்குக் காரண ாைன, நூல் இன்றி - நூல்களைக் கற்றறியாமல், கோட்டி கொளல் - அவையில் ஒன்றினைச் சொல்லுதல், அரங்கு இன்றி . ஆடுகின்ற அரங்கில்லாமல், வட்டாடியற்றே . உண்டை (பகடைக்காய்) உருட்டியது போன்றதாகும்.

|க-ரை) தனக்கு அறிவு நிரம்புதற்குக் காரணமான நூல்களைக் கல்லாத ஒருவன், அவையில் ஒன்றனைச் சொல்லுதல், ஆடுகின்ற அரங்கினை அமைக்காமல் உண்டை (பகடைக்காய்) உருட்டியது போன்றதாகும்.

2. கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும்

இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402

|ப-ரை) கல்லாதான் . கல்வி இல்லாதவன், சொல் காமுறுதல் - அவையில் (சபையில்) ஒன்றைச் சொல்ை ஆசைப்படுதல், முலை இரண்டும் - இரண்டு முலைகளும், இல்லாதாள் - இல்லாத ஒருத்தி, பெண் - பெண் தன்மை கயினை (இன்பத்தினை), காமுற்றற்று - ஆசைப்பட்டது போன்றதாகும். * - .