பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

1க-ரை நூல்களைக் கல்லாத ஒருவன், தான் கற்றவ னென்று தன்னை மதித்துக் கொள்ளும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெட்டுவிடும்.

6. உளர்.என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர் அனையர் கல்லா தவர். 406

(ப-ரை) கல்லாதவர் . கல்லாதவர்கள், உளர் . இருக் கின்றார்கள், என்னும் - என்று சொல்லப்படும், மாத்தி ரையர் அல்லால் . அளவினர் ஆவதேயல்லாமல், பயவா - விளையாத, களர் . பயனில்லாத களர் நிலத்தினை, அனையர் - போன்றவர்கள் ஆவார்கள்.

(கரை) கல்லாதவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்று சொல்லப்படும் அளவினர் ஆவதேயல்லாமல், தமக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் அவர்கள் விளையாத களர் நிலத்தினை ஒப்பராவர்.

7. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று. 407

(ப-ரை) நுண் - நுட்பமாகிய, மாண் . மாட்சிமை யுடையதாகி, நுழைபுலம் நூல்களில் சென்ற அறிவினை, இல்லான் . இல்லாதவனுடைய, எழில் நலம் . எழுச்சியும் நல்ல அழகும்,மண் - மண் சாந்தினாலே, மாண் - மாட்சிமை யாக, புனை - அலங்காரம் செய்து புனையப்பட்ட, பாவை - பாவை அழகையும் எழுச்சியையும் கொண்டிருப்பதை, அற்று -போன்றதாகும்.

|க-ரை) நுண்ணியதாகப் பெருமையுடையதாகிப் பல நூல்களிலும், சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சி யும், அழகும் மண் சாந்தினால் செய்யப்பட்ட பாவையி துடைய எழுச்சியும் அழகும் போன்றதாகும்.