பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

2. உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை

நில்லாது நீங்கி விடும். 592.

|ப-ரை உள்ளம் - ஊக்கம், உடைமை உடைமையே, உடைமை - நிலைபெற்ற உடைமையாகும், பொருள் . செல்வம், உடைமை - பெற்றிருப்பதானது, நில்லாது . நிலைத்திருக்காமல், நீங்கிவிடும் - அகன்று போய்விடும்.

(கரை) ஊக்கம் உடையவராக இருப்பதே ஒருவர்க்கு நிலையான உடைமையாகும். மற்றபடி பொருள் உடைமை யென்பது நிலையாக நில்லாமல் நீங்கிவிடும்.

3

ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் cat.ks% ஒருவந்தம் கைத்துடை யார். 593

(ப-ரை ஒருவந்தம் - நிலைத்திருப்பதாகிய, ஊக்கம். ஊக்கத்தினை, கைத்து உடையார்.தமது கைப் பொருளாக உடையவர்கள், ஆக்கம் - கைப்பொருளை (செல்வம்) இழந்தேம் - இழந்து விட்டோம் என்று என்று நினைத்து, அல்லாவார் - மனம் துன்புற மாட்டார்கள்.

{க-ரை) நிலைபெற்ற ஊக்கத்தினைக் கைப்பொரு ளாகக் கொண்டவர்கள் இழந்தாராயினும்,கைப்பொருளை இழந்தோம் என்று மனம் வருந்த மாட்டார்கள்.

4. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா

ஊக்கம் உடையான் உழை. 594

(ப-ரை) அசைவு - தளர்ச்சி என்பது, இலா - இல்லாமல், ஊக்கம் ஊக்கத்தினை, உடையான் - உடைய ஒருவன், உழை - இருக்கும் இடத்திற்கு, ஆக்கம் - செல்வ மானது, அதர்வினாய் - தானே வழி கேட்டுக் கொண்டு, செல்லும் . போய்ச் சேரும்.

(கரை) அசைவில்லாத ஊக்கத்தினை உடையவன்

இருக்கும் இடத்திற்குப் பொருள்தானே வழி தேடிக் கொண்டுபோகும்.