பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260.

சிக்கு சிதைவு வந்தபோதும், ஒல்கார் . தளராது தமது பெருமையினை நிலைநிறுத்துபவர் ஆவார்கள்.

க ரை) யானையானது புதையாகிய அம்பினால் புண்பட்ட போதும், தளராமல் நின்று தனது பெருமை யினை நிலைநிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர்கள், தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்த போதும் மணம் தளர மாட்டார்கள். தமது பெருமையினை நிலை. நிறுத்துவார்கள்.

8, உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு. 598 |ப-ரை) உள்ளம் - ஊக்கம், இலாதவர் - இல்லாதவர் கள், உலகத்து - உலகத்தாருள், வள்ளியம் - வண்மை யுடையேம் (ஈகைக்குணம் உடையேம்) என்னும் . என்கின்ற, செருக்கு - தம்மைத் தாமே மதித்தலை, எய்தார் . அடையப்பெற மாட்டார்கள்.

(க-ரை) ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தாருள் சயாம் வண்மையுடையேம் என்று தம்மைத் தாமே மதிக்கும் பெருமையினைப் பெறமாட்டார்கள்.

9. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின். $99 (ப. ரை பரியது . மற்ற மிருகங்களைவிட பெரிய உடம்பினை உடையது, கூர் - கூர்மையான, கோட்டது. கொம்புகளையும் உடையது, ஆயினும் - என்றாலும். யானை - அந்த யானை, புலி - புலியானது, தாக்குறின் . தன்னை எதிர்த்து வந்தால், வெரூஉம் - பயப்படும்.

(க.ரை எல்லா விலங்கினங்களிலும் தானே பெரிய உடம்பினையுடையது அதுவேயன்றி கூரிய கொம்புகளை பும் தந்தங்களையும்) உடையது. என்றாலும், அப்படிப் பட்ட யானையானது, ஊக்கம் நிறைந்த சிறிய உருவங், கொண்ட புலி தனக்கு எதிர்ப்பட்டால் அதற்கு அஞ்சும்.