பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

2. ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு. 64?

ப-ரை ஆக்கமும் . செல்வப் பெருக்கமும், கேடும் . கெடுதியும், அதனால் - தம் சொல்லால், வருவதால் . வரும் ஆதலால், சொல்லின் கண் - சொற்களிடத்தில், சோர்வு . சோர்வு உண்டாக்காமல், காத்து பாதுகாத்து, ஒம்பல் - போற்றுதல் வேண்டும்.

(கரை) செல்வப் பெருக்கமும் அழிவும் தமது சொல் லால் வரும். ஆகையால், சொற்களில் சோர்வில்லாமல் போற்றிக் காத்தல் வேண்டும். -

3. கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல். 643" (ப-ரை) கேட்டார் - நண்பராக ஏற்றுக் கொண்ட வரை, பிணிக்கும் . வேறுபடாமல் கட்டுகின்ற, தகை அவாய் - குணத்தினை விரும்புகின்றதாகவும், கேளாரும் . பகைமையால் ஏற்றுக்கொள்ள மனமில்லாதவரும், வேட்ப நட்பினை விரும்புமாறு, மொழிவதாம் சொல் சொல்லம் படுவதே சொல்லாகும்.

(கரை) நண்பர்களாக இருந்தும் கேட்கும் உள்ளம் படைத்தவர்களைப் பிணிக்கும் தன்மையுடையதாகிப் பகைமையால் ஏற்றுக் கொள்ளாதாரும் பகை நீங்கி நண்ப ராக ஆக விரும்பும் வண்ணம் சொல்லப்படுவதே சொல் லாகும்.

4. திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின் ஊங்குஇல், 64崎, (ப-ரை சொல்லை . சொல்லினை, திறனறிந்து . திறங்களைத் தெரிந்து, சொல்லுக சொல்லுதல் வேண்டும், அதனின் அப்படிச் சொல்லுவதைவிட, ஊங்கு - மேலான, அறனும் . அறமும், பொருளும் - பொருளும், இல் - வேறு இல்லை.