பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

சோர்வு, இலன் - இல்லாதவனாகி, அஞ்சான் . அச்சம் இல்லாதவனாகி. (இருப்பவனாகிய) அவனை - அவளை, இகல் - மாறுபாடான பகைமை கொண்டு, வெல்லல் . வெல்லுதல், யார்க்கும் அரிது - எவர்க்கும் அருமையான தாகும் (முடியாததாகும்.) -

(கரை) தான் எண்ணியவற்றைப் பிறர்க்குச் சொல்லு வதில் வல்லவனாகி, சொல்லுவதில் சோர்வில்லாதவனாகி, அவைக்கு அஞ்சாதவன் எவனோ அவனை மாறுபாட்டி னால் வெல்லுதல் யாவர்க்கும் அரிதாகும்.

8. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் கிரந்து இனிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648 (ப-ரை) தொழில் - தொழில்களை (செயல்களை) நிரந்து ஒழுங்குபட கோர்த்து, இனிது சொல்லுதல் - இனிமையாகச் சொல்லுவதில், வல்லார்ப் பெறின் - வல்லவரைப் பெற்றால், ஞாலம் - உலகமானது, விரைந்து கேட்கும் . அவற்றை விரைவாகக் கேட்டு ஏற்றுக் கொள்ளும்.

(க-ரை சொல்லப்படுவற்றை ஒழுங்காகவும் முறை யாகவும் இனிதாகவும் சொல்லுகிற வல்லவரைப் பெற்று விட்டால், உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்ளும்.

9. பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற

சிலசொல்லல் தேற்றா தவர், 649 (ப-ரை) மாசு - குற்றம், அற்ற . இல்லாதவர்களாக. சில . சில சொற்களை, சொல்லல் - ஆற்றலினால் சொல்லு தலை, தேற்றாதவர் . அறியாதவர்கள், பல பற்பல வகையான சொற்களை, சொல்லக் காமுறுவர் - எடுத்துக் கூற ஆசைப்படுவார்கள்,

(க-ரை குற்றமில்லாதவையாகச் சில வார்க்கைகளில் சொல்லும் ஆற்றல் அறியாதவர்கள். பற்பல வார்த்தை களைத் தொகுத்துச் சொல்ல ஆசைப்படுவார்கள்.