பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

10. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்

வேண்டாரை வேண்டாது உலகு. 670 (ப-ரை வினைத்திட்டம் - தொழிலில் திண்மையினை, வேண்டாரை விரும்பி மேற்கொள்ளாதவர்களை, எனைத் திட்பம் - (அதுவன்றி) வேறு பல வலிமைகள் எல்லாம் {அவர்கள்) எய்தியக் கண்ணும்.உடையவராகப் பெற்றிருந்த போதிலும், உலகு . உயர்ந்தோர், வேண்டாது . நன்கு மதிக்க மாட்டார்கள்.

(கரை) தொழிலின் திட்பங்களை, 'இது நமக்குச் சிறந்தது' என்று கொள்ளாதவர்கள் வேறு பல திட்பங்கள் உடையவர்களாக இருந்தாலும் உயர்ந்தோர் நன்கு மதிக்க மாட்டார்கள்.

68. வினை செயல்வகை (தொழிலினைச் செய்யும் திறம்)

1. சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது, 671

ப-ரை) சூழ்ச்சி முடிவு - ஆலோசனை என்பதற்கு எல்லை எதுவென்றால், துணிவு . மேற்கொண்ட தொழில் தப்பாது என்னும் துணிவினை, எய்தல் பெறுதலாகும், அத்துணிவு - அவ்வாறு துணிவு பெற்ற பின், தாழ்ச்சியுள் . நீட்டித்துச் செய்வதில், தங்குதல் தீது - தங்கி விடுமானால் அது குற்றமுடையதாகும்.

(கரை) ஆலோசனை செய்வதற்கு எல்லையென்பது யாதென்றால் ஆலோசிப்பவன் இனி இது தவறாது’ என்ற துணிவினைப் பெறுதலாகும். அப்படித் துணிந்தபின் நீட்டிக்கப்படுமானால் அது குற்றமுடையதாகிவிடும். - தி, தெ.-19