பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

4. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல். 714.

(ப-ரை) ஒளியார்முன் - அறிவால் மிக்கவரும் ஒத்த வரும் இருக்கும் சபையில், ஒள்ளியராதல் - தாமும் சிறந்த அறிவுடையராதல் வேண்டும், வெளியார்முன் - அறிவில்லா தவர் (புல்லர்கள் சபையில், வான் - வெண்மையான, கதை - சுண்ணாம்பின், வண்ணம் - நிறத்தினை, கொளல் . கொண்டிருத்தல் (ஒன்றும் அறியாதார்) போல் இருத்தல் வேண்டும்.

(க-ரை) தம்மைவிடச் சிறந்தவர்கள் இருக்கும் அவைக் கண் (சபையில்) தானும் சிறந்த அறிஞராக விளங்குதல் வேண்டும். புல்லர்கள் இருக்கும் சபையில் அவர்கள் மதித்தற் பொருட்டு அவர்கள் போலவே ஆதல் வேண்டும்.

5. கன்றுஎன்ற வற்றுள்ளும் கன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு. 715. (ப-ரை) முதுவருள் - தம்மைவிட அறிஞர் மிக்க சபை யில், முந்து - அவர்களுக்கு முற்பட்டு, கிளவா - ஒன்றனைச் சொல்லாத, செறிவு - அடக்கமான குணம், நன்று - இது. நல்லது, என்ற வற்றுள்ளும் - என்று சொல்லப்பட்ட குணங்: களுக்கெல்லாம், நன்றே - நல்லதேயாகும்.

(கரை) ஒருவற்கு நல்லது என்ற குணங்கள் எல்லா வற்றிலும் நல்லதாவது எதுவென்றால் தம்மைவிட மிக்க வர்கள் உள்ள அவைக் கண் அவரின் முற்பட்டு ஒன்றனைச் சொல்லாததேயாகும்.

6. ஆற்றின் நிலைதளர்ங் தற்றே வியன்புலம்

ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. 716. (ப-ரை வியன்புலம் - அகன்ற நூற்பொருள்களை, உணர்வார். அவற்றினை உணர வல்லார், முன்னர் . சபையினிடத்து, இழுக்கு - (கற்றறிந்தவன் சொற்குற்றம்