பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313

fக-ரை) அவையில் அஞ்சாமல் பிறர் சொல்லுவதற்குப் பதிலாகச் சொல்லும் பொருட்டு, சொல் இலக்கண நெறி வியால் அளவை நூற்களைக் கற்றல் வேண்டும் என்பதாம்.

8. வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன் நுண்அவை அஞ்சு பவர்க்கு. 726 (ப-ரை வன் கண்ணர் . மனத்துணிவு என்னும் திண்மை, அல்லார்க்கு - இல்லாதவர்க்கு, வாளொடு - போர் செய்தற்கான வாளுடன், என் . என்ன தொடர்பு உண்டு, (அதுபோல) நுண் - நுட்பமான, அவை - (அறின; படைத்தோர் இருக்கும்) சபையினை, அஞ்சுபவர்க்கு - கண்டு அஞ்சுவோருக்கு, நூலொடு-தாம் கற்ற நூலுடனே, என் - என்ன தொடர்பு உண்டு?

(கரை) வன்கண்மை இல்லாதவர்களுக்கு வாளுடன் என்ன தொடர்பு உண்டு? அதுபோல, நுட்பமுள்ளவர்கள் நிறைந்த சபையைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு கற்ற நூலோடு என்ன தொடர்பு உண்டு? 7. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல். 727 !ப-ரை) அவையகத்து - பேச வேண்டிய அவை நடுவில், அஞ்சும் - அஞ்சுகின்ற, அவன், - கற்ற அவன்; கற்ற - கற்றறிந்த, நூல் - நூல்கள், பகை - போரிட வேண்டிய பகை, அகத்து - நடுவில், பேடி - போருக்கு அஞ்சுகின்ற பேடி, கை - தனது கையில் பிடித்த, ஒள் - கூரிய, வாள் - வாளினை ஒக்கும்.

(கரை) சொல்லப்பட வேண்டிய சபையினிடத்து அஞ்சுகின்றவன் கற்ற நூலானது, பகை நடுவில், அப் பகைக்கு அஞ்சுகின்ற பேடி பிடித்த கூர் வாளினை ஒக்கும் 8. பல்லவை கற்றும் பயம்இலரே கல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார். 728 (ப.ரை) நல்லவையுள் - நல்லோரிருந்த அவையில், தன்கு - நல்ல கருத்துக்களை, செலச் சொல்லாதார் .