பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

இடத்தார், பற்று - தாம் நின்ற இடத்தில், ஆற்றி . விடாமல் நின்று, வெல்வது - போர் செய்து வெல்வதே, அரண் - அரணாகும்.

(க-ரை படைப்பெருமையால் சூழ வல்லாராய் வந்து சூழ்ந்த பகைவரையும், தம்மைப் பற்றி நின்ற உள்ளிடத்து வீரரால் பற்றிய இடம் விடாமல் நின்று போர் செய்து வெல்வதே அரணாகும்.

9. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து

வீறு எய்தி மாண்டது அரண் . 749

(ப-ரை) முனை முகத்து போர் தொடங்கிய போது, மாற்றலர் - பகைவர்கள், சாய கெடும் வண்ணம், வினை முகத்து - உள்ளிருப்போர் செய்யும் செயல் வேறுபாடு களால், வீறு - உயர்வு, எய்தி - பெற்று, மாண்டது . மற்றும் வேண்டிய சிறப்பினையுடையதே, அரண் . அரணாகும்.

(கரை) போர் தொடங்கியபோது பகைவர் கெடும் வண்ணம், உள்ளிருப்போர் செய்யும் செயல் வேறுபாடு களால் வீறுபெற்று மேலும் வேண்டிய ஆட்சியினை உடையதே அரணாகும்,

10. எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண், 750

(ப.ரை) அரண் கோட்டையானது, எனை . எல்லா வகையான, மாட்சித்து - சிறப்புக்களையெல்லாம், ஆகியக் கண்ணும் - உடையதாக இருந்த போதிலும், வினை . தொழில் செய்யும் போது, மாட்சி . பெருமையினை {திண்மையினை) இல்லார்கண் இல்லாதவர்களாக இருந் தால், இல்லது . அவை இல்லாததேயாகும்.