பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353

தொன்றும் எந்த விதமான செயலிலும், சொல்லால் . சொற்களினால், தேறல்பாற்று - தெரிந்து புரிந்து கொள்ளும் முறையானது, அன்று - கூடாததாகும்.

(கரை) மனத்தினால் தம்முடன் பொருந்துதல் இல்லாதவர்களை எவ்விதமான செயலிலும் சொல்லினால் தெரிந்து கொள்ளும் முறையானது கூடாது என்பதாம்.

.ே கட்டார்போல் கல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும். 826

(ப-ரை) நட்டார் போல் - நண்பர்களைப் போல, நல்லவை சொல்லினும் . நன்மை பயக்கும் சொற்களையே சொன்னாரேயானாலும், ஒட்டார் - பகைவர்களுடைய, சொல் - சொற்கள், ஒல்லை . விரைவில், உணரப்படும் . அறிந்து தெரிந்து கொள்ளப்படும். x

(கரை) நண்பர்கள் போல நன்மை பயக்கும் சொற் களைச் சொன்னாலும் பகைவர்களுடைய சொற்கள் சொல்லிய அப்பொழுதே அறிந்து கொள்ளப்படும். .

7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். 827

(ப-ரை வில் . வில்லினது, வணக்கம் - வளையும் தன்மையானது, தீமை தீமையுண்டாக்குவதை, குறித் தமையான் - குறிப்பதானபடியால், ஒன்னார்கண் - பகை வரிடத்தில் காணப்படும்) சொல் - சொற்களையுடைய, வணக்கம் - வணக்கத்தினையும், கொள்ளற்க - நல்லதென்று கொள்ளாதிருத்தல் வேண்டும்.

(கரை) வில் வளைகின்ற வணக்கமானது தீமை செய்ததைக் குறித்தமையால் பகைவர்களிடம் உண்டா கின்ற சொற்களின் வணக்கத்தினையும் தீமையுண்டாக்கு வதாகவும் கொள்ளுதல் வேண்டும். r

தி. தெ.-23