பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

369

(க-ரை ஒருவன் நீதி நூல்களைக் கற்காமலும், அவை விதித்த நெறிமுறைகளைச் செய்யாமலும் தனக்கு வரும் பழிகளைப் பாராமலும் தான் பண்புடையவன் அல்லா மலும் இருந்தால் அவனுடைய பகைவரிக்கு அவனது பகைமை இனிதாகும். . . .”

6. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்

பேணாமை பேணப் படும், 866

(ப.ரை) காணா - அறியாமைக்குக் காரணமான, மனத் தான் . மிகுந்த கோபமுடையவன், கழிபெரும் . மிகுந்து வளர்கின்ற, காமத்தான் - காமத்தினையுடை யவன் யாவனோ, (அவனுடைய பேணாமை - பகைமை, பேணப்படும் விரும்பிக் கொள்ளப்படும்.

(கரை) தன்னையும் பிறனையும் அறிந்து கொள்ள முடியாத பெரும் கோபத்தினைக் கொண்டவனும் மிகுந்து வளரும் காமத்தினையும் உடையவன் எவனோ அவனு டைய பகைமையினைப் பகைவர்கள் விரும்பிக் கொள்ளு வார்கள். -

7. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து

மாணாத செய்வான் பகை, 867

iப-ரை) அடுத்து இருந்து - ஒரு தொழிலினைத் தொடங்கியபின், மாணாத - அதற்குப் பொருந்தாதவை களை, செய்வான் பகை - செய்கின்றவனுடைய பகைமை வினை, கொடுத்தும் - பொருள் கொடுத்தாகிலும், மன்ற . உறுதியாக, கொளல் - கொள்ளுதல், வேண்டும் - வேண்டப் ப்டுவதாகும். -

(கரை) தொழிலினைத் தொடங்கியபின் அதற்குப் பொருந்தாதனவற்றைச் செய்பவனுடைய பகைமையைச் சில பொருள் கொடுத்தாயினும் கொள்ளுதல் ஒரு தலை கயாக வேண்டும். قَ يې . . . پي نه لاند ن -

தி, தெ.-24

پيم شاه لا د ژ