பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

தோள்களை, நிறை - நிறைகுணத்தால் திருந்திய, நெஞ்சம் - நெஞ்சம், இலாதவர் - இல்லாதவர்கள், தோய்வர் . புணரச் செய்வார்கள்.

(கரை) நிறை குணத்தினால் திருந்திய நெஞ்சம் இல்லாதவர்களே நெஞ்சினால் பிறவற்றை விரும்பி உடம்பினால் பொருள் கொடுப்பாரை விரும்பும் மகளிர் தோள்களைத் தோய்வார்கள் ,

8. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப

மாய மகளிர் முயக்கு. 3.18

(ப-ரை மாய - வஞ்சனை நிறைந்த, மகளிர் - பொது மகளிர், முயக்கு தழுவிப் புணர்தலை, ஆயும் . ஆராய்ந் தறியும், அறிவினர் . அறிவினையுடையவர், அல்லார்க்கு . அல்லாதவர்களுக்கு, அணங்கு - தெய்வ மகள் என்ப . என்று கூறுவர்.

(க-ரை மயக்கி வஞ்சிக்க வல்ல மகளிரது முயக்கத்

தினை, அவ்வஞ்சகத்தினை ஆராய்ந்தறியும் அறிவுடையார் அல்லாதார்க்கு அனங்கு என்று சொல்லுவார்.

9. வரைவுஇலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. 919 (பரை வரைவு இலா - உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற அளவு இல்லாமல் (விலைகொடுப்போர் யாரையும் சேர்கின்ற) மாண் - சிறப்பான, இழையார் . ஆபரணத்தை புடைய மகளிரது, மென் - மெல்லிய, தோள் தோள்கள், புரையிலா - அக்குற்றத்தினை அறியும் அறிவில்லாத, பூரியர்கள். கீழ் மக்கள், ஆழும் அளறு அழுந்துகின்ற நரகமாகும்.

(க-ரை) விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள், அக்குற்றத்தினை அறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் தரகமாகும்.